தீபாவளி பண்டிகையையொட்டி 310 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கம்: ‘எம்டிசி’ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, 310 சிறப்பு இணைப்பு பஸ்களை இயக்குவதாக எம்டிசி நிர்வாகம் அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து  நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில், இன்று (24.10.2019) முதல் 26ம் தேதி வரை 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும்  பேருந்துகள் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், எம்ஜிஆர் பேருந்து நிலையம் (கோயம்பேடு), கே.கே.நகர் பேருந்து நிலையம்  ஆகிய இடங்களிலிருந்து இயக்கப்படும்.  

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சம்பந்தப்பட்ட ஐந்து பேருந்து நிலையங்களுக்கு மாநகரப் பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.  எனினும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு, வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள 5பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளில் பயணித்திட ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு  பேருந்துகளை இன்று (24.10.2019) முதல் 26.10.2019 வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் இயக்க



Popular posts
வேலூர் மாவட்டத்தில் ஓட்டல் கண்ணா மூலம் காவலர்களுக்கு உணவளித்து வருகிறது
Image
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image
பொத்தேரியில் கடப்பாரையால் கடையின் பூட்டை உடைத்து வாலிபர் திருடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது
Image
கொரோனா வைரஸ் யாரை எளிதில் தாக்கும்... யாருக்கு அதிக ஆபத்து...எச்சரிக்கை!
Image