ரவுசு காஞ்சனா

ள்ளாட்சித்தேர்தலை மையப்படுத்தி ஒத்தையா, இரட்டையா போட்டு பார்த்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் ஆளும்கட்சியைச் சேர்ந்த அதகளப் பெண்மணி ஒருவரின் ரவுசு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி மக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாம். யார் அந்த டூபாக்கூர் பேர்வழி என்ற கேள்வி எழுப்புகிறதா.. அவரின் பெயர் காஞ்சனா ஜார்ஜ். ஆயிரம் விளக்குப் பகுதிக்குட்பட்டட 111 வது வார்டில் தான் அவர் குடியிருக்கிறார். 
இந்த வார்டின் அ.தி.மு.க. கவுன்சிலர் வேட்பாளர் தான் தான் என கடந்த பல நாள்களாக அலப்பறை செய்து வருகிறாராம் காஞ்சனா. அடிதடிக்கு பெயர் போன இவர், ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேஷனில் தான் பல நாள்கள் கஸ்டடியில் இருப்பார். அந்தளவிற்கு இவருக்கு எதிராக நூற்றுக்கணக்கான புகார்கள், அந்த போலீஸ் ஸ்டேஷனில் தூசி படிந்து கிடக்கிறதாம். ஆளும்கட்சியை பெயரைச் சொல்லி போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் இவர், எடுத்தெற்கெல்லாம் தி.நகர் எம்.எல்.ஏ.வும், தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளருமான சத்யாவுக்கு போன் போடட்டுமா என உதார் விடுகிறாராம். மாவட்டச் செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ. என இரண்டு பதவிகளை வைத்திருந்தாலும் அலட்டல் இல்லாமல் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் சத்யா பெயரை காஞ்சனா கெடுக்கிறாரே..
ஆளும்கட்சிக்கே அவப்பெயரை தேடித் தருகிறாரே..பலதலைமுறைகளாக அ.தி.மு.க.வில் இருப்பவர்களே அமைதியாக இருக்கும் போது, தி.மு.க.வில் இருந்து ஆட்சி அதிகாரத்தை வைத்து துட்டு சம்பாதிப்பதற்காக அ.தி.மு.க.வுக்கு ஜம்ப் ஆன காஞ்சனா பேயாட்டம் ஆடுகிறாரே என லோக்கல் அ.தி.மு.க. நிர்வாகிகளே கண்ணீர் வடிக்கிறார்களாம். அ.தி.மு.க. உறுப்பினரான பின்பும் தி.மு.க. பாசம் போகாமல் அவர்களோடு சேர்ந்துக் கொண்டு களவாணிதனம் பண்ணும் இவரைப் போன்றவர்கள் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டால், அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படும் பொதுமக்கள் கூட எதிர்க்கட்சிகளுக்கு தானே ஓட்டுப் போடுவார்கள் என ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள உளவுத்துறை போலீசாரே வெளிப்படையாக புலம்புகிறார்களாம். ஆளும்கட்சிக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காஞ்சனாவின் கொட்டத்தை சத்யா எம்.எல்.ஏ. அடக்க வேண்டும் என்பதுதான் விசுவாசமிக்க அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பம்.  செய்வாரா மக்கள் சேவகர் சத்யா எம்.எல்.ஏ. 



Popular posts
வேலூர் மாவட்டத்தில் ஓட்டல் கண்ணா மூலம் காவலர்களுக்கு உணவளித்து வருகிறது
Image
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image
பொத்தேரியில் கடப்பாரையால் கடையின் பூட்டை உடைத்து வாலிபர் திருடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது
Image
கொரோனா வைரஸ் யாரை எளிதில் தாக்கும்... யாருக்கு அதிக ஆபத்து...எச்சரிக்கை!
Image