தீக்கிரையான விமானத்தின் பக்கத்தில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது
சோமாலிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்-ஷபாப், ஞாயிற்றுக்கிழமை கென்யாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இது பற்றி தகவல் வெளியிட்ட அந்த அமைப்பு, "ஏழு விமானங்களும் மூன்று ராணுவ வாகனங்களும் வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டன" எனக் கூறியுள்ளது. அத்துடன் தீக்கிரையான விமானத்தின் பக்கத்தில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஆப்பிரிக்க கமாண்ட் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. "மண்டா வளைகுடா பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் ஒரு தாக்குதல் நடந்திருக்கிறது. நிலைமை கண்காணிக்கப்படுகிறது." எனக் கூறியிருக்கிறது.