" alt="" aria-hidden="true" />
நெல்லையில் பாரம்பரிய சமையல் போட்டியில் அடுப்பில்லாமல் சமையல் செய்து அசத்திய மாணவிகள்
பாளையங்கோட்டையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் அடுப்பில்லாமல் சமையல் செய்து தயாரித்த 150க்கும் மேற்ப்பட்ட பாரம்பரிய உணவு பொருட்கள் காட்சிபடுத்தப்படுத்தப்பட்டன.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தூய இன்னாசியர் கல்வியியல் கல்லூரியில் மறந்து போன உணவு பழக்கத்தை நினைவு படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகளை கொண்டு இயற்கை, பாரம்பரிய உணவு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல கல்லூரியை சேர்ந்த 165 மாணவிகள் பங்கேற்று இயற்கை உணவுகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தினர். உணவு கண்காட்சியில் பெரும்பாலான உணவு பொருட்கள் அடுப்பில்லாமல் தயார் செய்யப்பட்ட உணவுகளாக காட்சி படுத்தப்பட்டிருந்தன.
உணவு கண்காட்சியில் பால் பயிறு துவையல், மலைதக்காளி துவையல், சோள கொழுக்கட்டை, திணை உருண்டை, பிரண்டை ஜூஸ் போன்ற பல்வேறு உணவு வகைகள் காட்சி படுத்தப்பட்டிருந்தன. இந்த திருவிழாவை நெல்லை, பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கண்டு ரசித்ததோடு நம் பாரம்பரியத்தையும் மனத்தார பாராட்டி சுவைத்து மனதோடு மகிழ்ச்சியாய் சென்றனர்..